ராசிபலன்

கன்னி

இன்றைய பலன்:

கன்னி மனதில் நல்ல திட்டங்கள் தோன்றும். அவற்றை செயல்படுத்தும் வகையில் சூழ்நிலையும் ஓரளவு சாதகமாக இருக்கும். சந்திப்புகள் நிகழும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 நிறம்: வெண்மை, பச்சை

வாரப் பலன்:

அன்­புள்ள கன்னி ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் உங்களுக்கு சந்திரன் அருள்பார்வை வீசுவார். சனிபலம் தனிபலம் தரும். சுக்கிரனால் நலமுண்டு. ராகு, கேது, புதன், சூரியன், செவ்வாயின் ஆதரவு இல்லை. குருவால் நலமுண்டு.

நல்லதை நினைத்தால் நமக்கும் நன்மை விளையும் என்று சிந்திப்பவர்கள் நீங்கள். தற்போது வாழ்க்கைப் பயணம் குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. சனீஸ்வரன் கண்டுகொள்ளவில்லை என்றாலும் குரு பகவான் காக்கும் அரணாக இருப்பார். இவ்வாரம் அகலக்கால் வைக்கும் முயற்சிகள் கூடாது. ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய முயற்சிப்பதும் கூடாது. வழக்கமான பணிகளுடன் சில திடீர் பொறுப்புகளும் சேர்ந்துகொள்ளும். வழக்கமான தடைகள், இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். எனினும் கடும் உழைப்பாளிகளான உங்களால் வெற்றியை ருசிக்க இயலும். பொருளியல் நிலவரம் நன்றாக இருக்கும். வழக்கமான தேவைகள், செலவுகள் ஈடுகட்டப்படும். சிக்கனம் காப்பது நல்லது. உடல்நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தார் வகையிலான மருத்துவச் செலவுகள் குறைந்திடும். பணியாளர்கள் எதுகுறித்தும் அலட்டிக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புதுப் போட்டிகள் முளைக்கக்கூடும். வார இறுதியில் புதிய தொடர்புகள் தேடி வரலாம். மேலும் எதிர்பாராத ஆதாயங்களும் கிட்டும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெற்றோர் தரும் ஆதரவு பலம் சேர்க்கும்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 4, 8