ராசிபலன்

கடகம்

இன்றைய பலன்:

கடகம் ஏட்டிக்குப் போட்டியாக எதையும் செய்யக்கூடாது. இதனால் இழப்பு மட்டுமே ஏற்படும். மாலையில் ஓய்வு உண்டு. செலவுகளும் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 நிறம்: ஊதா, சிவப்பு

வாரப் பலன்:

அன்­புள்ள கடக ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகங்களான ராகு, கேது சிறப்பாக உள்ளன. புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன் நலம்புரிவர். குரு, சனி, செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக அமையவில்லை.

தோல்விகளை வெற்றிக்கான படிகளாக கருதும் பக்குவசாலிகள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் இதே பக்குவமும் நல்ல திட்டமிடலும் தேவை. மேலும் கடும் உழைப்பும் விடாமுயற்சியும் இருப்பின் கடினமான பொறுப்புகளையும் எளிதில் நிறைவேற்றிடலாம். அடுத்து வரும் நாள்களில் பணிச்சுமை குறைய வாய்ப்பில்லை. வழக்கம்போல் இங்கும் அங்குமாக ஓடியாடிக் கொண்டிருப்பீர்கள். பிறரிடம் எந்த உதவிகளையும் எதிர்பார்க்க வேண்டாம். எனினும் உண்மையான நண்பர்கள் துணை நிற்பர். உறவினர்கள் பலர் நல்லவிதமாகப் பேசிப்பழகுவர். பொருளாதர நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களில் சிலருக்கு எதிர்பாராத தொகைகள் தேடி வரக்கூடும். கையிருப்பைக் கொண்டு அனைத்து செலவுகளையும் ஈடுகட்ட இயலும். உபரி வருமானத்திற்கு முயற்சி செய்வதில் தவறு ஏதுமில்லை. பயணங்கள், பணத்தை முடக்கும் முயற்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சிறு உடல் கோளாறுகள் தோன்றி மறையும். உழைப்பிற்குரிய ஓய்வு எடுப்பது முக்கியம். உடன் பணியாற்றுவோரை அனுசரித்துச் செல்வது பணியாளர்களுக்கு நல்லது. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புண்டு. இவ்வாரத்தின் இறுதியில் இனிக்கும் சம்பவங்கள் நிகழக்கூடும். இச்சமயம் தடைகள் குறைந்திருக்கும். முக்கியமான சந்திப்புகள் வகையில் ஆதாயங்கள் கிடைத்திடும்.

குடும்ப ரகசியங்கள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அனுகூலமான நாள்கள்: மே 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9