ராசிபலன்

கும்பம்

இன்றைய பலன்:

கும்பம் குடும்பத்தார் வகையில் தகுந்த ஒத்துழைப்பு கிட்டும். இன்று நல்லவர்களும் துணை நிற்பர். எனவே அனைத்தும் திட்டமிட்டபடி லாபகரமாக நடந்தேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9 நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள கும்ப ராசிக்­கா­ரர்­களே,

மாதக் கோள்களான புதன், சுக்கிரன், சூரியன் ஆகியோரின் அமைப்புகள் சிறப்பாக உள்ளன. சந்திரனின் ஆதரவுண்டு. குரு, சனி, ராகு, கேது, செவ்வாயின் ஆதரவு இல்லை.

யாரையும் போட்டியாகக் கருதாமல் அரவணைத்துச் செல்பவர்கள் நீங்கள். இவ்வாரம் சில கோள்களின் அமைப்பு சாதகமாக இல்லை என்று புலம்ப வேண்டாம். ஏனெனில் இதர ஆதரவுக்கோள்கள் உங்களை நடைபோட வைக்கும். அடுத்துவரும் நாள்களில் பல்வேறு பொறுப்புகள் சூழ்ந்திருக்கும். அவற்றைக்கண்டு சலிப்படைய வேண்டாம். ஏனெனில் பொறுப்புகளை நிறைவேற்றும் பட்சத்தில் பாராட்டுகளும் ஆதாயங்களும் குவியும். அடுத்து வரும் நாள்களில் தடைகள் மிகுந்திருக்கும். இதனால் எதை, எப்படிச் செய்வது என்று தீர்மானிக்க இயலாமல் தடுமாறுவீர்கள். இச்சமயம் உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களையும் அனுபவசாலிகளையும் அருகில் வைத்திருப்பது நல்லது. அடுத்து வரும் நாள்களில் வருமானம் சுமார்தான். செலவுகளைத் திட்டமிட்டு மேற்கொண்டால் பற்றாக்குறை ஏற்படாது. உடல்நிலை சீராக இருக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் கடமையைச் செய்துவிட்டு பொறுமை காப்பது நல்லது. வார இறுதியில் தடைகள் விலகி பணிகளில் முன்னேற்றம் காண்பது உற்சாகம் தரும். வீட்டில் இயல்புநிலை இருக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர்.

அனுகூலமான நாள்கள்: மே 2, 4

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9