ராசிபலன்

ரிஷபம்

இன்றைய பலன்:

ரிஷபம் நாளின் தொடக்கம் முதல் கச்சதமாகச் செயல்படுவீர்கள் என நம்பலாம். இன்று தடைகள் அதிகம் குறுக்கிடாது. வரவுகள் இனிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள ரிஷப ராசிக்­கா­ரர்­களே,

நிழல் கிரகமான ராகு அருள்புரிவார். புதன், சுக்கிரன், செவ்வாய் நற்பலன்களைத் தருவர். குரு, சனி, கேது, சூரியன், சந்திரனால் நலமில்லை.

எப்போதும் இன்முகத்துடன் வலம் வரும் பண்பாளர்கள் நீங்கள். தற்போது உங்கள் இயல்புக்கேற்ப பக்குவமாகச் செயல்பட வேண்டும். இவ்வாரம் உங்களுக்குரிய பொறுப்புகள் அதிகரிக்கும். ஒரு பணியை முடிப்பதற்குள் மற்றொரு வேலை அழைக்கும். எனவே ஓய்வு குறித்து யோசிக்காமல் பம்பரமாகச் சுழன்றால் மட்டுமே பொறுப்புகளை நிறைவேற்றி ஆதாயம் காண முடியும். புது பொறுப்புகளை ஏற்பது, பணத்தை முடக்குவது ஆகியன வேண்டாம். உடல்நலம் நன்றாக இருக்கும் என்றாலும் வீண் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமான சந்திப்புகள் சாதகமாகக்கூடும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பில்லை. எனினும் செலவுகளும் விரயங்களும் குறைந்திருக்கும். நீண்ட நாள் முயற்சிகளையும் இப்போது தூசுதட்டலாம். மங்கல நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடந்தேறும். வழக்குகள் குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் வேண்டாம். பணியாளர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. செய்தொழிலில் விரிவாக்க நடவடிக்கைகளில் நிதானம் தேவை. வார இறுதியில் சம்பந்தம் இல்லாத விவகாரங்களில் தலையிடக்கூடாது. இச்சமயம் எதிரிகளின் போக்கில் கவனம் தேவை.

குடும்பத்தார் சிறு வாக்குவாதங்களைப் பெரிதுபடுத்தாமல் இருந்தால் குடும்ப அமைதி காக்கலாம்.

அனுகூலமான நாள்கள்: மே 1, 2

அதிர்ஷ்ட எண்கள்: 4, 9