ராசிபலன்

மிதுனம்

இன்றைய பலன்:

மிதுனம் சம்பந்தம் இல்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். பின்னர் ‘குத்துகிறதே குடைகிறதே’ என புலம்பக்கூடாது. முக்கியப் பணிகள் நடந்தேறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 நிறம்: பச்சை, அரக்கு

வாரப் பலன்:

அன்புள்ள மிதுன ராசிக்காரர்களே,

மாதக் கோள்களான புதன், சூரியன், சுக்கிரன் சிறப்பான இடங்களில் அமர்ந்து அருள்புரிகின்றன. குரு ஏற்றம் தருவார். செவ்வாயின் ஆதரவுண்டு. கேது, சனி, ராகு, சந்திரனால் நலமில்லை.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பும் நல்லவர்கள் நீங்கள். இவ்வாரம் அதிகம் அலட்டிக் கொள்ளாமலேயே சில வெற்றிகளை வசப்படுத்துவீர்கள். உங்களது தனித்திறமைகள் பளிச்சிடும் நேரமிது. உங்கள் செயல்திட்டங்களுக்கு அனுபவசாலிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டும். திட்டமிட்ட வேலைகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள் என்றாலும் உழைப்பிற்குரிய ஆதாயங்கள் கேட்டால்தான் கிடைக்கும். வருமான நிலை எப்படி இருக்குமோ என்ற கேள்வியும் சந்தேகமும் தேவையில்லை. வழக்கமான தொகைகள் நிச்சயம் தேடி வரும். எனவே வழக்கமான தேவைகள் எளிதில் நிறைவேறும். உடல்நலத்தில் அக்கறை தேவை. எல்லாம் தன்னால் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. பயணங்கள், புது முயற்சிகள் சாதகமாகக்கூடும். மங்கல நிகழ்வுகள் வகையில் செலவுகள் உண்டு. பணியாளர்கள் உழைப்பிற்குரிய வளர்ச்சியைக் காண்பர். வியாபாரம் வழக்கம்போல் நடந்தேறும். வார இறுதியில் எதிர்பாராத சந்திப்புகள் நிகழக்கூடும். இச்சமயம் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்.

குடும்ப நலன் தொடர்பிலான முயற்சிகள் நல்லபடியாக முன்னேற்றம் காணும்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4