ராசிபலன்

மீனம்

இன்றைய பலன்:

மீனம் புதியவர்களுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கம் வேண்டாம். இன்று பிறரது அனுபவங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். கோவில் தரிசனம் நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 நிறம்: நீலம், வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள மீன ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரன் அருள்பார்வை வீசுவார். புதன், சுக்கிரன் நலம்புரிவர். குருவருள் கிடைத்திடும். சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் வகையில் தொல்லை இருக்கும்.

வெற்றிக்காக கடுமையாக உழைக்கும் பண்பாளர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களது வாழ்க்கைப்பயணத்தில் பெரிய தடைகள் ஏதும் ஏற்பட்டுவிடாது. மாறாக நம்பிக்கையுடனும் திட்டமிட்டும் செயல்பட்டீர்கள் எனில் வாழ்க்கை இனிக்கும். இவ்வாரம் சுற்றி இருக்கும் அனைவரையும் நம்பிவிட வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களைக் காப்பது, விடாமுயற்சியுடன் செயல்படுவது ஆகியவை உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும். அடுத்து வரும் நாள்களில் மனதில் ஒருவித சஞ்சல உணர்வு குடிகொண்டிருக்கும். எதிரிகள் திடீரென நட்பு பாராட்டும் நிலையில், இதுவரை உறவு பாராட்டியவர்களேகூட திடீரென உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும். வேலைப்பளு வழக்கம்போல் அதிகரிக்கும். மறுபக்கம் தடைகள் சிக்கல்கள் ஆகியவையும் அவ்வப்போது குறுக்கிடும். அனுபவசாலிகள், நல்லவர்களின் துணையோடு செயல்பட்டீர்கள் எனில் போராட்டங்களைக் கடந்த ஆதாயம் காணலாம். புதுப் பொறுப்புகளை ஏற்பதைக் காட்டிலும் முன்பே ஏற்றுக்கொண்ட வேலைகளைக் கவனிப்பது நல்லது. வருமான நிலையில் மாற்றம் இருக்காது. எனினும் அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்டுவீர்கள். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம் என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. பணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் கிடைத்திடும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கிடும் திடீர் ஆதாயங்களைப் பெற்று மகிழ்வர். வார இறுதியில் நீண்ட நாள் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். இச்சமயம் எதிரிகளின் ஆதிக்கம் குறையும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். பெற்றோர் கூறும் அறிவுரைகள் வலுசேர்க்கும்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 28, 30

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5