உல‌க‌ம்

ஜோகூர் பாரு: மலேசியாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த சிங்கப்பூர் எடுத்த முடிவு, ஜோகூர் கடற்பாலத்திலும் இரண்டாம் இணைப்பிலும் அதிகப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.
மே 19ஆம் தேதியன்று ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் அவர் உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் அவருடன் பயணம் செய்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் உசேன் அமிர் அப்துல்லாஹினும் மாண்டார்.
ஆம்ஸ்டர்டாம்: போர்க் குற்றங்களுக்காகவும் மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பின் தலைவர்களுக்கும் கைதாணைகளைப் பிறப்பிக்க தாம் கோரியுள்ளதாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்ற அரசுத்தரப்பு வழக்கறிஞர் கரிம் கான் கூறியுள்ளார்.
புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அவர் மரணமடைந்தார்.
புத்ராஜெயா: ஜோகூரின் உலு திராம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் மாண்டனர். தாக்குதல் நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.