‘வீட்டுக்காவலில் நஜிப்’: அரசப் பிற்சேர்க்கை உண்மை என்கிறார் ஸாஹிட்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று அவருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புப் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் கூறப்படுவது உண்மை என்று மலேசியாவின் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிற்சேர்க்கை தொடர்பாக மறுஆய்வு செய்ய அனுமதி கோரி நஜிப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு டாக்டர் ஸாஹிட் தமது பிரமாண வாக்குமூலத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் முந்தைய மாமன்னரான பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கினார்.

இதன் விளைவாக அவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது.

அரச மன்னிப்பில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையை முன்னாள் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் ஸ்ஃப்ருல் அப்துல் அசிஸ் தம்மிடம் ஜனவரி 30ஆம் தேதியன்று காட்டியதாக அம்னோ தலைவரான டாக்டர் ஸாஹிட் கூறினார்.

“ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை நஜிப் காஜாங் சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் அனுபவிக்கலாம் என்று அந்தப் பிற்சேர்க்கையில் எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்சேர்க்கை ஜனவரி 29ஆம் தேதியன்று இணைக்கப்பட்டது. அதில் முந்தைய மாமன்னரின் கையொப்பமும் முத்திரையும் உள்ளன.

“அந்தப் பிற்சேர்க்கை உண்மையானது என்று உறுதியாகக் கூறுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் நான் வாசித்தேன். எனவே, அந்தப் பிற்சேர்க்கை இருப்பது உண்மைதான்,” என்று டாக்டர் ஸாஹிட் கூறினார்.

அந்தப் பிற்சேர்க்கையின் அசல் தலைமைச் சட்ட அதிகாரியிடம் உள்ளது என்றார் அவர்.

டாக்டர் ஸாஹிட்டின் பிரமாண வாக்குமூலம் மலேசிய நீதித்துறையின் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நஜிப்பின் மனு தாக்கல் தொடர்பான நீதிமன்ற விசாரணையை செய்தியாளர்களுக்குத் திறந்துவிட நீதிமன்றம் தடை விதித்தது.

நீதிபதி அமர்ஜீத் சிங் சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டார்.

அவர் தமது முடிவை ஜூன் 5ஆம் தேதி தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!