இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அண்டர்வுட் மரணம்

புதுடெல்லி: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வருணிக்கப்பட்ட டெரிக் அண்டர்வுட் உடல்நலக்குறைவால் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.

இடக்கை சுழற்பந்து வீச்சாளரான அண்டர்வுட் 1966 முதல் 1982ஆம் ஆண்டு வரை 86 டெஸ்டில் விளையாடி 297 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் இவர்தான். அத்துடன் 26 ஒரு நாள் போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் மொத்தம் 2,465 விக்கெட்டுகள் (676 ஆட்டம்) வீழ்த்தினார்.

1976-77ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தொடரின்போது அண்டர்வுட்டின் சிறப்பான பந்துவீச்சால் (29 விக்கெட்டுகள்) 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் வென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!