புக்கிட் மேராவில் ஐந்தறை வீவக வீடு சாதனை அளவாக $1.59 மில்லியனுக்கு மறுவிற்பனை

புக்கிட் மேராவின் பூன் தியோங் சாலையில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று $1,588,000க்குக் கைமாறியுள்ளது.

சிங்கப்பூரில் இதுநாள்வரை மறுவிற்பனை செய்யப்பட்ட ஆக விலையுயர்ந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு இதுவாகும்.

புரோப்னெக்ஸ் ரியால்டி சொத்து முகவர்களில் ஒருவர் ஏப்ரல் 28ஆம் தேதி அந்த வீட்டின் பரிவர்த்தனையை மேற்பார்வையிட்டதாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அந்நிறுவனம் அறிவித்தது.

இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதம், லோரோங் 1ஏ தோ பாயோவில் உள்ள வடிவமைத்து, கட்டி, விற்கும் திட்டத்தின்கீழான ஐந்தறை வீடு ஒன்று $1,569,000க்கு மறுவிற்பனையானதே சாதனையாக இருந்தது.

தற்போது புதிய சாதனை படைத்துள்ள வீடு, பூன் தியோங் சாலையில் 40 மாடிக் கட்டடமான புளோக் 9பியின் 35வது மாடிக்குமேல் அமைந்துள்ளது. 112 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த மறுவிற்பனை வீடு, 2016 ஜனவரியில் தொடங்கி 99 ஆண்டு குத்தகையைக் கொண்டுள்ளது.

தியோங் பாரு வியூ என்று அழைக்கப்படும் வீவக திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த வீடு உள்ளது. அத்திட்டத்தில் 9ஏ, 9பி, 10ஏ, 10பி என நான்கு புளோக்குகள் உள்ளன.

புளோக் 9பி பூன் தியோங் சாலையில் மட்டும் மூன்று நாலறை வீடுகள், 10 ஐந்தறை வீடுகள் என 13 வீடுகள், குறைந்தது $1 மில்லியனுக்குக் கைமாறின.

தியோங் பாரு வியூ என்பது 110, 111, 113, 114 புக்கிட் மேரா வியூ ஆகிய புளோக்குகளுக்கான சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் உள்ள மாற்று வீடமைப்புத் தலமாகும். புக்கிட் மேரா வியூ வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!