சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த மார்ச் மாதம் 20.7 விழுக்காடு சரிந்தது.

இது எதிர்பாக்கப்பட்டதைவிட மோசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 7.4 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.

மின்னணுவியல் சாரா ஏற்றுமதி சரிந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மார்ச் 17ஆம் தேதியன்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்திருந்தது. அவற்றில் மருந்து ஏற்றுமதியும் அடங்கும்.

மின்னணுவியல் ஏற்றுமதியும் சரிவு கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், மின்னணுவியல் சாரா ஏற்றுமதி 23.2 விழுக்காடு குறைந்தது.

மருந்து ஏற்றுமதி 70.3 விழுக்காடு சரிந்தது. கப்பல் மற்றும் படகுகளுக்கான பாகங்கள் ஏற்றுமதி 99.8 விழுக்காடு ($900 மில்லியன்) சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டு அடிப்படையில், மின்னணுவியல் ஏற்றுமதி தொடர்ந்து சரிந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அது 9.4 விழுக்காடு குறைந்தது.

எண்ணெய் சாரா ஏற்றுமதி சரிவுக்குத் தொலைதொடர்புச் சாதனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு அதிகம் பங்களித்தது.

மாத அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த மார்ச் மாதம் 8.4 விழுக்காடு குறைந்தது.

பிப்ரவரி மாதத்தில் அது 4.9 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் குறைந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!