சிங்கப்பூரில் அதிகம் விற்பனையான கார் இதுவே

சிங்கப்பூரில் ஆக அதிகமாக விற்பனையான கார்களின் பட்டியலில் மெர்சிடிஸ்-பென்ஸ் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பல ஆண்டுகளில் முதன்முறையாக, டொயோட்டாவையும் போட்டி நிறுவனமான பிஎம்டபிள்யூவையும் மெர்சிடிஸ்-பென்ஸ் முந்தியது.

இங்கு ஆக அதிகமாக விற்பனையான கார்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் முதலிடம் பிடித்திருப்பது இதுவே முதன்முறை என நம்பப்படுகிறது. அந்த ரக கார்கள் பெரும்பாலானவை $250,000க்குமேல் விலைபோகின்றன.

கடைசியாக 1995ல், முதலிடத்தைப் பிடிக்க டொயாட்டாவுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் கடுமையான போட்டியைத் தந்தது. அப்போது மெர்சிடிஸ்-பென்சைவிட டொயோட்டா 21 கார்களை மட்டும் கூடுதலாக விற்றிருந்தது.

நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கார் பதிவு தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஆக அதிகமாக விற்பனையான 10 கார் ரகங்களில் புதுவரவான டெஸ்லாவும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மின்சார வாகன ரகமான டெஸ்லா, பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் சந்தைக்குள் நுழைந்த கிட்டத்தட்ட ஈராண்டுகளில் டெஸ்லா இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூவின் போட்டி நிறுவனமான ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ மூன்றாவது இடத்திற்கு இறங்கியது.

கடந்த ஆண்டு 4,336 மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களும் 3,997 டொயோட்டா கார்களும் 3,626 பிஎம்டபிள்யூ கார்களும் பதிவு செய்யப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!