முதற்கட்ட தேர்தல் களத்தில் 8 மத்திய அமைச்சர்கள்

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல்19) தொடங்குகிறது.

18வது மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதற்கட்டமாக, 21 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் எட்டு மத்திய அமைச்சர்கள், இரண்டு முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநர் முன்னணி வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், அசாம், மகாராஷ்டிரா மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் தலா 5 தொகுதிகள் முதலியன முதற்கட்ட வாக்குப் பதிவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

முதற்கட்ட வாக்குப் பதிவில் ஆக அதிகமான தொகுதிகள் தமிழ்நாட்டிலேயே உள்ளன. மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஒரே நாளில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிடும்.

அன்றைய தினம் வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறும் நம்பிக்கையில் அவர் உள்ளார்.

மற்றொரு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 52, அருணாச்சலப் பிரதேசம் மேற்குத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சரும் முன்னாள் அசாம் முதல்வருமான சர்வானந்தா சோனோவால், அசாம் மாநிலம் திப்ருகர் தொகுதியிலும் மத்திய விலங்குநல, மீன்வளத் துறை அமைச்சர் சஞ்சீவ் பலியன் உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் தொகுதியிலும் களம் காண்கின்றனர்.

அறிவியல், தொழில்நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியிலும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் ராஜஸ்தான் மாநிலம் அல்வர் தொகுதியிலும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நீலகிரி தொகுதியில் திமுகவின் தற்போதைய எம்.பி.யான ஆ.ராசாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளில் இருந்து விலகிய தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை தொகுதியில் களம் காண்கிறார்.

மேலே குறிப்பிடப்பட்ட அசாம் முன்னாள் முதல்வர் சர்வானந்தா சோனோவால் தவிர மற்றொரு முன்னாள் முதல்வர் திரிபுராவின் பிப்லவ் குமார் தேவ். மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அவர் மேற்கு திரிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!