ரவி சிங்காரம்

பல்கலைக்கழகப் பருவத்திலிருந்து ‘டிரோன்’ எனும் ஆளில்லா வானூர்திகளில் இவருக்கு நாட்டம் இருந்தது.
சிங்போஸ்ட் அரங்கில் மே 11ஆம் தேதி மாலை, இந்திய நகைச்சுவைக் கலைஞர் ராம்குமார் படைத்த நிகழ்ச்சியில் 240க்கும் மேற்பட்ட ரசிகர்களின் சிரிப்பொலியோடு இணைந்த கரவொலி அரங்கை நிறைத்தது.
‘ஈக்கான் பாராங்’ மீனின் எண்ணற்ற முள்களை உடைக்க இருபுறமும் இழுக்கின்றனர் டான்யா பிள்ளை நாயரும் அவரது அத்தை தனமும்.
அன்னையர் தினம் என்பது கொண்டாட்டத்திற்கு உகந்த தினம் எனக் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (64%) சிங்கப்பூரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியக் காவியமான மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது ‘டிரையேங்கல் எடியுகேஷன் கன்சல்டன்சி’ நிறுவனத்தின் ‘பாலபாரதம்’ நாடகம்.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதியன்று பிற்பகலில் உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கில் ‘தமிழ் நேர்காணல் போட்டி’ எனும் தமிழ்மொழி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி, மாலை 2 முதல் 6 மணி வரை புக்கிட் பாஞ்சாங் சமூக மன்றம் தமிழ்மொழி விழா நிகழ்ச்சியாக பாடல், மாறுவேடப் போட்டிகளைச் சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூர் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ் 5.0’ இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
துர்கா மணிமாறனின் ‘திரிபடாக்கா’ நடனக்குழு வழங்கும் ‘மகாலயா’ எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி, மே 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு ‘அலியான்ஸ் ஃபிரான்செஸ்’ அரங்கில் நடைபெறவுள்ளது .