குற்றம்

அரசந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டி சலுகை தொடர்பாக அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநருக்கு மே 20ஆம் தேதியன்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைச்சாலை அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்து, அதிபருக்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஆடவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக மே 2ஆம் தேதிக்கும் மே 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 32 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பெண்களின் அந்தரங்கப் படங்களை ஏமாற்றிப் பெற அவர்களின் சமூக ஊடகக் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்ட முழுநேர சிங்கப்பூர் ஆகாயப் படை சேவையாளருக்கு 11 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போக்கிமான் அட்டைகள் அடங்கிய இரண்டு பெட்டிகளைக் கடைகளிலிருந்து திருடி, அவற்றை இணையத்தில் விற்ற 23 வயதான தாதிக்கு ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு செவ்வாய்க்கிழமையன்று (மே 14) விதிக்கப்பட்டது.